தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாப்பிரெட்டிபட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு? அதிமுக வேட்பாளர் அதிரடி அறிவிப்பு - இடைத்தேர்தல்

தருமபுரி: பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி தமிழ்நாடு அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக வேட்பாளர்

By

Published : Apr 3, 2019, 11:54 AM IST

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி தருமபுரி தாலுகாவிற்கு உட்பட்ட சவுளூரான் கொட்டாய், முத்துக்கவுண்டன் கொட்டாய், எஸ்.எஸ்.ரெட்டியூர், நூல அள்ளி, முக்கல் நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய கோவிந்தசாமி, பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், மகப்பேறு நிதி உதவி, பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை பொது மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனிடையே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னையை குறித்து அவரிடம் தெரிவித்தனர். குடிநீர் பிரச்னை போர்க்கால அடிப்படையில் தேர்தல் முடிந்தவுடன் தீர்த்து வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details