தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 22, 2021, 10:08 PM IST

ETV Bharat / state

ஆவணங்களை வீசி எறிந்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!

தர்மபுரி: ஆட்சியர் அலுவலகத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

dharmapuri eb staff protest
dharmapuri eb staff protest

தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது பணிகளை நிரந்தரம் செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்பொழுது தங்களது கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்காமல் நிராகரித்து வருவதால், தங்களுக்கு அரசு ஆவணங்கள் எதுவும் வேண்டாம் எனக் கூறி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போரட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு கூலி உயர்த்தி வழங்கவேண்டும். புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட நேரங்களில் எங்களை பணிக்கு அழைத்து செல்கிறார்கள், ஆனால் போதிய ஊதியம் வழங்குவதில்லை. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வருகிற சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு கொடுக்க அழைத்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details