தர்மபுரி:செங்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகள் திவ்யா பி.எஸ்.சி. பட்டதாரி, வயது 21. இவருக்கும், பண்டாரசெட்டிப்பட்டியை சேர்ந்த அவருடைய அத்தை மகள் அருண் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
அருண் தற்போது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போலீசாராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மோஹிதாஸ்ரீ என்ற ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
வரதட்சணை கொடுமை பெண் தீக்குளிக்க முயற்சி திருமணத்தின் போது அருணுக்கு வரதட்சணையாக 12 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திவ்யா வீட்டினர் கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில் மேலும் 10 பவுன் தங்க நகை வரதட்சணையாக கேட்டு அருண் திவ்யாவை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். தன்னை அருண் அழைத்துச் செல்ல வேண்டும் என பலமுறை கூறியும் அவர் மறுத்து வந்துள்ளார். தற்போது தன்னை விவாகரத்து செய்ய போவதாகவும் அருண் கூறுகிறார் என்று திவ்யா கண்ணீர் மல்க கூறினார்.
தன் கணவர் அருண் மீது நடவடிக்கை எடுக்க கோரி திவ்யா தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 26) தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு இருந்த போலீசார் அவரை காப்பாற்றி, இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ரூ.33 லட்சம் கோழிப் பண்ணை மோசடி- நால்வருக்கு மூன்றாண்டு சிறை