தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்: மக்களின் கோரிக்கைகளை கேட்கும் எம்பி - dmk mp senthil kumar

திமுக எம்பி செந்தில்குமார் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் சுற்றுப் பயணத்தின் வாயிலாக தருமபுரி மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துவருகிறார்.

dharmapuri dmk mp senthil kumar given new cell phone to schoool student in a meeting
dharmapuri dmk mp senthil kumar given new cell phone to schoool student in a meeting

By

Published : Dec 15, 2020, 11:20 AM IST

தருமபுரி: 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடந்த மூன்று நாள்களாக விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் நேற்று பென்னாகரம் பகுதியில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

செல்போன் கேட்ட மாணவன்

இதையடுத்து, செக்குமேடு பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன், தன்னிடம் ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியவில்லை என்று கூறினார்.

திமுக எம்பி செந்தில்குமார்

செந்தில்குமார் உடனடியாக தனது உதவியாளரிடம் தெரிவித்து மாணவனுக்காக புதிய ஆண்ட்ராய்டு செல்போனை அந்நிகழ்ச்சியிலேயே வாங்கிக் கொடுத்துள்ளார். இவர் இதேபோன்று சுமார் 10-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மக்களைச் சந்திக்க அஞ்சும் அதிமுக அரசு - தருமபுரி எம்.பி. கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details