தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘என்னுடன் விவாதம் செய்யத் தயாரா?’ - அன்புமணிக்கு திமுக வேட்பாளர் சவால்! - pmk

தருமபுரி: தன்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்யத் தயாரா என அன்புமணி ராமதாஸுக்கு தருமபுரி திமுக வேட்பாளர் செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.

திமுக வேட்பாளர் செந்தில்குமார்

By

Published : Mar 28, 2019, 3:11 PM IST

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் செந்தில்குமார் அந்த மாவட்டத்தில் சூறாவளி பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டியில்,

குடிநீர் பிரச்னை உள்ளிட்ட மக்கள் பிரச்னைக்கு அதிக முன்னுரிமை தருவேன். ஒகேனக்கல் சுற்றுலா தளம் உலகத் தரத்திற்கு உயர்த்த பாடுபடுவேன். பள்ளி கல்லூரி மாணவர்களின் சுகாதாரத்தை பேணி காக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்தார்.


மேலும், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் என்னுடன் விவாதம் செய்யத் தயார் என்றால், அவர் தன்னைத் தானே மண்ணின் மைந்தன் என்று கூறி வருவதற்கு பதில் தெரிவிப்பேன் எனவும் செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.

செந்தில்குமார் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details