தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் மீத்தேன் மூலமாக இயங்கும் பேருந்துகள் முதன்முறையாக இயக்கம்

சி.என்.ஜி. கேஸ் மூலமாக இயங்கும் பேருந்துகளை தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 28, 2023, 7:14 PM IST

Updated : Apr 28, 2023, 8:05 PM IST

தருமபுரியில் மீத்தேன் மூலமாக இயங்கும் பேருந்துகள் முதன்முறையாக இயக்கம்

தருமபுரி:நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. வருவதால் புதிய தொழில்நுட்பமான சி.என்.ஜியைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்கும் தொழில்நுட்பத்திற்கு பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்கள் மாறி வருகின்றனர்.

இந்த நிலையில், தருமபுரியில் இருந்து சேலம் வழியாக இயக்கப்படும் இரண்டு பேருந்துகளில் 8 சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட சி.என்.ஜி (கம்ப்ரசர் நேச்சுரல் கேஸ்) மீத்தேன் வாயு மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கத்தை இன்று (ஏப்.28) மாவட்ட ஆட்சியா் சாந்தி தொடங்கி வைத்தார். சி.என்.ஜி மீத்தேன் வாயு ஒரு கிலோ 80 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலமாக பேருந்து இயக்கும் பொழுது ஒரு கிலோ மீத்தேன் வாயுவில் ஆறு கிலோமீட்டர் வரை பேருந்து இயக்கலாம் என்றும் ஒரு லிட்டர் டீசலில் நான்கரை கிலோமீட்டர் மட்டுமே பேருந்து இயக்க முடியும்.

தருமபுரியில் சி.என்.ஜி. கேஸ் மூலமாக இயங்கும் பேருந்துகள் இயக்கம்

இதையும் படிங்க:பழனியில் பயணியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோட முயன்ற இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி

டீசல் விலை ஒரு லிட்டர் 95 ரூபாய் ஆக விற்பனை ஆகிறது. இதன் காரணமாக, மீத்தேன் வாயுவால் இயக்கப்படும் பேருந்துகளில் எரிபொருள் செலவு குறைந்து வருவாய் அதிகரிப்பதால் பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் மீத்தேன் மூலம் இயங்கும் பேருந்துகளுக்கு மாறிச் செல்கின்றனர். டீசலில் செல்லக்கூடிய பேருந்துகளை சுமார் நான்கு முதல் ஆறு லட்ச ரூபாய் செலவில் மீத்தேன் மூலம் இயங்கும் பேருந்துகளாக சேலம் பகுதியில் மாற்றித் தருகின்றனர்.

ரூ.80 ஆயிரம் வரை லாபம்:மத்திய அரசு அனுமதித்த அளவில் இப்பேருந்துகள் மாற்றியமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வித கேடும் இல்லாமல் இயக்கப்படுகிறது. எரிவாயு மூலம் இயக்கப்படுவதால் மாதம் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைப்பதாகவும் பேருந்துக்கான எரிபொருள் செலவு குறைவதாகவும் பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:இயற்கை விவசாயத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் - கருணாஸ் கோரிக்கை

Last Updated : Apr 28, 2023, 8:05 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details