தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் மலர்விழி! - தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி

தருமபுரி: மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மலர்விழி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்பு வெளியிட்டார்.

தருமபுரி வரைவு வாக்காளர் பட்டியல்  தருமபுரி வாக்காளர்கள் எண்ணிக்கை  தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி  dharmapuri district collector
தருமபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் மலர்விழி

By

Published : Dec 23, 2019, 3:24 PM IST

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி வெளியிட்டார். நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் வரைவு வாக்காளர் பட்டியலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

தருமபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் மலர்விழி

அந்த வரைவு வாக்காளர் பட்டியலில், ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 13 ஆயிரத்து 968 பேரும், பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 92 ஆயிரத்து 345 பேரும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 114 பேர் என மொத்தம் 12 லட்சத்து 6 ஆயிரத்து 427 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் ரெடி!

ABOUT THE AUTHOR

...view details