தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், ஒன்றியக் குழுத் தலைவர், ஒன்றியக்குழு துணைத்தலைவர், கிராம ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 9 ஊராட்சிமன்ற ஒன்றியத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முடிவுகளை அறிவிக்கவில்லை. முடிவுகள் அறிவிக்காத காரணத்தால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. முடிவுகளை அறிவிக்கக் கோரி திமுகவினர் அப்பகுதியில் உள்ள கடைகள், காவல் துறை வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும், மொரப்பூா் ஒன்றியத்தில் கட்சிகளின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அதிமுக ஒன்று, திமுக நான்கு, பாமக மூன்று, விசிக, சுயேச்சை தலா ஒன்று என்ற கணக்கில் வெற்றிபெற்றனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் விபரம்:
மாவட்ட குழு தலைவராக யசோதா (அதிமுக ) துணை தலைவர் சரஸ்வதி அதிமுக கூட்டணி (பாமக).
ஒன்றியம் வாரியாக வெற்றி பெற்றவர்கள்:
1. தருமபுரி ஒன்றியக் குழுத் தலைவா் - நீலாபுரம் செல்வம்(அதிமுக),துணைத் தலைவர் - தம்பி ஜெய்சங்கர் அதிமுக கூட்டணி(தேமுதிக).
2. அரூர் ஒன்றியக் குழுத் தலைவர் - பொன்மலர்(அதிமுக), துணைத் தலைவர் - அருண்(அதிமுக)