தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காற்றில் பறந்த தகுந்த இடைவெளி: கூட்டமாக பொருள்களை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள்

தருமபுரி: பேருந்து நிலைய சுற்றுப்புற கடைகளில் தகுந்த இடைவெளி கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கிச் சென்றதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொருட்கள் வாங்க சென்ற மக்கள்
பொருட்கள் வாங்க சென்ற மக்கள்

By

Published : Aug 18, 2020, 4:51 AM IST

தருமபுரி ஆறுமுக ஆசாரி தெரு, சீனிவாசராவ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் நேற்று (ஆகஸ்ட் 17) காலை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திருமண நிகழ்வுக்கு புத்தாடை எடுக்க ஏராளமானோர் ஒரே கடையில் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தருமபுரியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு துணிக் கடையில் பணியாற்றிய ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடைகளை மூடி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. வணிக நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து கடை நடத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதியளித்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கடையை திறக்க அனுமதி வழங்கியது. ஆனால், வாக்குறுதியை கடைபிடிக்காமல் கடை உரிமையாளா்கள் வியாபாரம் செய்தனர். பொதுமக்கள் கூட்டத்தால் அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகுந்த இடைவெளி கடைபிடிக்காமல் மக்கள் பொருள்களை வாங்கி சென்றதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details