தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் சாலை விபத்துகள் 35% குறைந்துள்ளது - Dharmapuri Road Awareness Program

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை விபத்துகள் 35 விழுக்காடு குறைந்துள்ளதாக வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தர்மபுரியில் சாலை விபத்துக்கள் 35 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்
தர்மபுரியில் சாலை விபத்துக்கள் 35 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்

By

Published : Jan 28, 2020, 9:43 PM IST

தமிழ்நாடு முழுவதும் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வானது வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

விழிப்புணர்வில், 800க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து மோட்டார் வாகன சட்டம் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் ஆய்வாளர் பன்னீர் செல்வம் திரையிட்டு விளக்கினார்.

தர்மபுரியில் சாலை விபத்துக்கள் 35 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்

குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஏற்படும் விளைவுகள், காரில் செல்லும்பொழுது சீட் பெல்ட் அணிவதன் பயன்களை மாணவர்களுக்கு அவர் விளக்கி கூறினார். மேலும், கடந்த ஒன்றரை வருடத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை விபத்துகள் 35% குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சாலை பாதுகாப்பு குறித்து மதுரையில் விழிப்புணர்வு பேரணி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details