தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் - தர்மபுரி மாவட்ட ஆட்சியர்

தருமபுரி: அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவியருக்கு உலர் உணவு பொருள்கள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியா் மலர்விழி தொடங்கி வைத்தார்.

உலர் உணவுப் பொருட்கள்
உலர் உணவுப் பொருட்கள்

By

Published : Jul 15, 2020, 3:41 AM IST

சத்துணவு மற்றும் சமூக நலத்துறை திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு, மதிய உணவுக்குப் பதிலாக உலர் உணவுப் பொருள் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தருமபுரி இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்புவரை படிக்கும் 672 மாணவ மாணவியருக்கு உலர் உணவுப்பொருள்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி வழங்கினார்.

மாவட்டத்தில் 1, 367 மையங்களில் சத்துணவு பெறும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் 51 ஆயிரத்து 211 மாணவ, மாணவியர்கள், 6 முதல் 8ஆம் வகுப்புவரை படிக்கும் 43 ஆயிரத்து 990 மாணவ மாணவியர்கள் 9 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் 28 ஆயிரத்து 311 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 512 மாணவ மாணவியர்கள் இதன்மூலம் பயன்பெறுகின்றனர்.

நேற்று ( ஜூலை 14) முதல் நான்கு நாள்களுக்குள் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளிவாரியாக, வகுப்புவாரியாக மாணவ மாணவியருக்கு அந்தந்த பள்ளிகளிலேயே உலர் உணவுப்பொருள்கள் இந்த வார இறுதிக்குள் வழங்கப்படும்.

தலைமை ஆசிரியர்களால் சரிபார்க்கப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு தகுந்த இடைவெளி, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் மற்றும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்த பின்னர் மாணவர்களுக்கு பொருள்களை எவ்வித இடர்பாடும் இல்லாமல் முறையாக வழங்க வேண்டும்.

அயர்ன், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 9 வகையான வைட்டமின் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு 3.100 கிலோகிராம் அரிசியும், 1.200 கிலோகிராம் பருப்பும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு 4.650 கிலோகிராம் அரிசியும், 1.250 கிலோகிராம் பருப்பும் ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details