தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தருமபுரி ஆட்சியர்

தருமபுரி: ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தருமபுரி ஆட்சியர் எஸ். மலர்விழி வெளியிட்டார்.

collector s malarvili
collector s malarvili

By

Published : Feb 15, 2020, 8:55 PM IST

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மலர்விழி வெளியிட்டார். இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி

தருமபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 26 ஆயிரத்து 60 பேரும், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 6 ஆயிரத்து 852 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 141 பேர் என மொத்தம் 12 லட்சத்து 33 ஆயிரத்து 53 பேர் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
பெயர் ஆண்கள் பெண்கள் மற்றவர் மொத்தம்
தருமபுரி 13,2562 12,9487 106 26,2155
பாலக்கோடு 11,6620 11,2847 14 22,9481
பென்னாகரம் 12,4516 11,5473 8 23,9997
பாப்பிரெட்டிபட்டி 13,0495 12,8788 6 25,9289
அரூா் 12,1867 12,0257 7 24,2131

ABOUT THE AUTHOR

...view details