தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டை ரேஷன் கடையில் முதலமைச்சரின் கரோனா நிவாரண உதவித்தொகை இரண்டாம் தவணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரோனா நிவாரணம்: தர்மபுரி ஆட்சியர் தொடங்கி வைப்பு! - கரோனா நிவாரண நிதி
தர்மபுரி: கரோனா நிவாரண உதவித்தொகை இரண்டாவது தவணை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.
கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி: தர்மபுரி ஆட்சியர் தொடங்கி வைப்பு!
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கலந்துகொண்டு, 2ஆயிரம் ரூபாய் பணம், 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும், மாவட்டத்தில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 788 குடும்ப அட்டைதாரர்களுக்குக் கரோனா நிவாரண தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.