தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் மாதம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் "பொதுமக்களிடையே மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
”உரிய நேரத்தில் பரிசோதனை மேற்கொண்டால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம்”
தர்மபுரி : பெண்கள் உரிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டால் மார்பகப் புற்றுநோயை தடுக்க முடியும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரவித்துள்ளார்.
இன்றும் கிராமப்புறங்களில் ஆண் குழந்தைகள் மீது காட்டும் அக்கறையை பெண் குழந்தைகள் மீது காட்டுவதில்லை. பெண்கள் திருமணமாகி சென்றாலும் அங்குள்ள குடும்ப சூழல் காரணமாக தனது உடல் நலனில் அக்கறை காட்டுவதில்லை. மொத்தம் நான்கு வகையான மார்பகப் புற்றுநோய்கள் உள்ளன. பெண்கள் உரிய காலத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டால் மார்பகப் புற்றுநோயை எளிதில் தடுக்கலாம்.
ஆரம்பக் கட்டத்தில் இந்நோயை கண்டறிந்தால் எளிய மருத்துவ சிகிச்சைகள் மூலம் குணமாக்க இயலும். இது குறித்து தொடர்ந்து அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை பொது மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது." என்றார். முன்னதாக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் தொடர்பான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.