தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாமந்திப் பூ சாகுபடி செய்துள்ளனர்.
சாமந்திப் பூ விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம்! - Dharmapuri chrysanthemum flowers
தருமபுரி: பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சாமந்திப் பூக்கள் வழக்கமான பருவத்திற்கு முன்பே பூக்கத் தொடங்கியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக சாமந்திப் பூ ஆயுதபூஜை பண்டிகை காலங்களில் மகசூல் தரும் வகையில் விவசாயிகள் நடவுசெய்து வருவது வழக்கம். இந்த ஆண்டும் அடுத்த மாதம் வரவிருக்கும் ஆயுத பூஜைக்காக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சாமந்திப் பூ நடவு செய்தனர். கடந்த ஒரு மாதமாக பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ததால் பூவின் செடி வளர ஏற்ற தட்பவெட்ப நிலை நிலவி வருவதால், சாமந்திப் பூ ஒரு மாதத்திற்கு முன்பே பூக்கத் தொடங்கி உள்ளது.
பூக்கும் பருவம் வருவதற்கு முன்பே பூக்கள் பூக்கத் தொடங்கியதால் தற்போது பூ விளைச்சல் அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் இல்லாத சமயம் என்பதால் பூ கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நாட்களில் கிலோ 180 ரூபாய் வரை விற்பனை விலை கிடைக்கும் என பயிரிட்ட விவசாயிகளுக்கு தற்போது பூ விளைச்சல் விலை குறைவு காரணமாக ஏமாற்றம் அடைந்துள்ளனர்.