தருமபுரி மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் அதியமான்-ஒளவையார் சிலைகள் அமைந்துள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான இந்த இடத்தில், சிலைக்கு கீழ் ஒரு சூட்கேஸ் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதியமான் - ஒளவையார் சிலைக்கு கீழிருந்த மர்மப்பெட்டி! - statue bomb threat
தருமபுரி : நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள அதியமான்-ஒளவையார் சிலையின் கீழிருந்த மர்மப் பெட்டியால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி
பின்னர் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைவாக வந்த காவல் துறையினர், சூட்கேஸை உடனடியாக சோதனை செய்தனர். பின்னர் வெடிகுண்டு இல்லை எனக் கண்டறிந்த பின்னர், சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, அதில் மஞ்சள், குங்குமம், விபூதி, குடும்பப் புகைப்படம், சில காகிதங்கள், லேகிய டப்பா உள்ளிட்டவைகள் இருந்துள்ளன. இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சூட்கேஸை வைத்தது யார் என்று காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.