தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் தருமபுரி சரக அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் அம்மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தருமபுரியில் தடகளப் போட்டிகளைத் தொடங்கிவைத்த அமைச்சர்! - dharmapuri today news
தருமபுரி: தருமபுரி சரக அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் அன்பழகன்
இந்நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அமைச்சர், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
பின்னர், போட்டிகளில் வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.