தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணறுகளில் தண்ணீர் ஊரத் தொடங்கியது. அந்த தண்ணீர் விவசாயத்திற்கு போதிய அளவு இருப்பதால் விளை நிலங்களில் நெற் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர்.
சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள் தற்போது கதிர் முற்றும் நிலையில் உள்ளதால் அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது.
ஆனால் கிணற்றில் தண்ணீர் போதிய அளவு இல்லாததால் சவுளுப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி தவமணி என்பவர் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள நெற் பயிர்களை காப்பாற்ற நாளொன்றுக்கு 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரினை விலை கொடுத்து வாங்கி டிராக்டர் மூலம் பாய்ச்சி விளை நிலத்தில் பாய்ச்சி வருகின்றார்.