தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தாள பள்ளம் அன்பழகன் வீட்டில், சுங்கத்துறை அலுவலர்கள் காலையிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் மாநில விவசாயப் பிரிவுச் செயலாளரான டி.ஆர்.அன்பழனுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சுங்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பிரமுகர் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை! - அதிகாரிகள் சோதனை
தருமபுரி: அதிமுக முக்கிய பிரமுகர் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் தருமபுரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பிரமுகர் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை!
டி.ஆர். அன்பழகன் அரசு ஒப்பந்தங்கள், பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார். இவர் அதிமுகவின் முக்கிய பொறுப்புகளிலும் உள்ளார். தற்போது நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி பகுதியில் அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அவரது இல்லத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.