ஆடி பதினெட்டாம் நாள் பண்டிகைக்காக தருமபுரி மாவட்டம் பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஏரியூர், பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல், பெரும்பாலை போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை பென்னாகரம் வாரச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவந்தனர்.
ஆடி 18... பென்னாகரத்தில் ஆடுகள் விற்பனை ஒரு கோடியாம்! - aadi 18
தருமபுரி: ஆடி பதினெட்டு பண்டிகையை முன்னிட்டு தருமபுரி, பென்னாகரம் வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
ஆடுகள் விற்பனை
தருமபுரி மட்டுமல்லாது சேலம், கிருஷ்ணகிரி, பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆடுகள் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டன.
பண்டிகை காலம் என்பதால் ஒரு ஆடு ரூபாய் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்தினால் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆடுகளின் விற்பனை ஒரு கோடியை கடந்துள்ளது.
ஆடுகள் உட்பட சந்தையின் மொத்த வருவாய் மூன்று கோடியை கடந்துள்ளது. இதனால் வணிகர்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.