தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவில் முறைகேடுகள் நடைபெறுவதாக சார் ஆட்சியர் பிரதாப்க்கு அதிகப்படியான புகார் வந்துள்ளது.
மேலும், அரசு மகளிர் மேல்நிலை பள்ளி சத்துணவு அமைப்பாளர் பிரகாசம், அரூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு முட்டை வழங்கும் பணியை வேறொருவரின் பெயரில் எடுத்துக்கொண்டு, மலை கிராம பகுதிகளுக்கு வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு மட்டும் முட்டை வழங்குவதாகவும் புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திடீரென சார் ஆட்சியர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது சத்துணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். அப்போது மாணவிகளுக்கு வழங்கும் மதிய உணவு தரமற்றதாக, அளவு குறைந்து இருந்துள்ளது. மாணவிகளுக்கு வழங்கப்படும் முட்டை எண்ணிக்கையும் மாணவிகளை விட குறைவா இருந்திருக்கிறது. பொருட்களின் இருப்பு பதிவேட்டில் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களின் கணக்குகளை முறையாக பராமரிக்காமல் குளறுபடியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உணவு தரமில்லை, முறையாக பதிவேடுகள் பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் பிரகாசம் என்பவரை பணியிடை நீக்கம் செய்து பிரதாப் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:'எர்த்தோபார்ம்' தடவி பழுக்க வைக்கப்பட்ட 1.5 டன் வாழைப்பழங்கள் - அதிரடி பறிமுதல்