தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தர்மபுாியில் தான் அதிக நியாய விலைக் கடைகள் உள்ளன' - Dharmapui District News

தர்மபுரியில் தான் அதிக நியாய விலைக் கடைகள் உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பிழகன் தெரிவித்தார்.

அமைச்சா் கே.பி.அன்பழகன்
அமைச்சா் கே.பி.அன்பழகன்

By

Published : Oct 10, 2020, 10:55 PM IST

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, மொரப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஐந்து பகுதி நேர நியாய விலைக் கடைகள் மற்றும் இரண்டு நகரும் நியாய விலைக் கடைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்துவைத்தார்.

அதன்பின் விழாவில் பேசிய அவர், ”தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, மொரப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஐந்து பகுதி நேர நியாய விலைக் கடைகள் மற்றும் இரண்டு நகரும் நியாய விலைக் கடைகளை திறந்துவைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

நியாய விலைக் கடைகளுக்கு முன்பு தாய்மார்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக அரசு புதிய நியாய விலைக் கடைகளை தொடங்கிவருகிறது.

இதனடிப்படையில் குக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் எவ்வித தங்குதடையின்றி பொருள்களை வாங்கும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடைகள் தோற்றுவிக்கப்பட்டுவருகிறது.

அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 1,019 நியாயவிலைக் கடைகளும், (முழுநேர நியாயவிலைக் கடைகள் 450, பகுதிநேர நியாயவிலைக் கடைகள் 569) 9 மகளிர் நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 41 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1,069 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் தர்மபுரி மாவட்டத்தில் தான் அதிக அளவில் நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.


தமிழ்நாடு முழுவதும் 5,36,437 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் 13,384 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 118 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படுகிறது.

இதன் மூலம் அதிக தூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வீண் அலைசல் கால விரையம் ஆகியவை தவிர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:'அதிமுக தலைமையில்தான் கூட்டணி' - கே.பி. முனுசாமி

ABOUT THE AUTHOR

...view details