தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொ.மல்லாபுரம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக - விசிக தொண்டர்கள் சாலை மறியல் - vck mayor post mislead

விடுதலை கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சியை திமுக கைப்பற்றியதால் அக்கட்சியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விசிகவிற்கு துரோகம் இழைத்த திமுகவினர்
விசிகவிற்கு துரோகம் இழைத்த திமுகவினர்

By

Published : Mar 4, 2022, 4:10 PM IST

தருமபுரி:பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 10 வார்டுகளிலும், பாமக 3 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பேரூராட்சி தலைவர் பதிவுகளுக்கான பட்டியலில் பொ.மல்லாபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்ற போது திமுகவைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு 8 வார்டு உறுப்பினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சின்னவேடி என்பவருக்கு 7 வார்டு உறுப்பினர்களும் வாக்களித்த நிலையில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை சேர்ந்த சாந்தி வெற்றிபெற்றார்.

இந்த நிலையில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினருக்குத் தலைவர் பதவி அளிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொம்மிடி ரயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

நியாயம் கேட்டு விசிகவினர் ஆர்ப்பாட்டம்....

குற்றச்சாட்டு

அப்போது ஆக்ரோஷமாகப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருக்கு திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் துரோகம் விளைவிப்பதாகவும், கூட்டணி தர்மத்திற்கு அவர் துரோகம் செய்துள்ளதாகவும் உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கே பேரூராட்சி தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும் எனகோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி சாலைமறியல் செய்தனர். அப்பொழுது விசிக தொண்டர்களுக்கும் , காவல் துறையினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையும் படிங்க:மறைமுக தேர்தல் முடிவுகள் :சென்னை மாநகராட்சியின் 340 ஆண்டு கால வரலாற்றில், இது ஒரு மைல்கல்

ABOUT THE AUTHOR

...view details