தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று (அக்.22) மாலை 5:30 மணிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களிடம் தனித்தனியாக சோதனை நடத்தினர்.