தருமபுரியில் திமுக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திமுகவினர் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம். - dmk demonstration
தருமபுரி: தருமபுரியில் திமுக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுகவினர் ஆர்ப்பாட்டம்
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்திவரும் மத்திய, மாநில அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மண் அடுப்பு மற்றும் மண் சட்டியின் மீதும் இனிமேல் இதுதான் என்று எழுதி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.