கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து நான்காயிரத்து 157 கனஅடி நீர், கபினி அணையில் இருந்து ஆயிரத்து 500 கனஅடி நீர் என, மொத்தம் ஐந்தாயிரத்து 657 கனஅடி நீா் காவிரியிலிருந்து திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று (செப்.04) நீா்வரத்து 23ஆயிரம் கனஅடியாக இருந்தது.
ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக சரிவு! - தருமபுரி மாவட்ட செய்திகள்
தருமபுரி : ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது.
ஒகேனக்கல்
இந்நிலையில் இன்று (செப்.05) நீா்வரத்து ஏழாயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்த மழை நீர், அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் என 16 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து தற்போது உள்ளது. இருப்பினும் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதையும் படிங்க:பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக உயர்வு