தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி கூறுகையில், "இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியில் சுற்றி திரிவது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி குற்றம்.
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் அவா்கள் இருக்கக்கூடிய பகுதியில் இருந்து 1.5 கிலோ மீட்டா் சுற்றளவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் நடமாடும் கடைகள் இயங்கிவருவதால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.