கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சி.என்.பாளையம் கிராம ஊராட்சியில், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மல்லிகா வைத்திலிங்கம், முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் தாமரைச்செல்வி தனசேகரன் ஆகியோர் இரு குழுக்களாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மல்லிகா வைத்தியலிங்கம் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக அமைக்கப்பட்ட பந்தலில், முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் தாமரைச்செல்வி தனசேகரன் ஆதரவாளர்கள் அலங்கார வளைவு அமைத்ததால், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.