தர்மபுரி மாவட்டம் பெரியார் சிலை அருகே 130 ஆண்டுகள் பழமையான சி.எஸ்.ஐ பேராலயம் உள்ளது. இப்பேராலயத்தில் பேராயராக பிரபு சந்திரமோகன் உள்ளார். இவரை கோத்தகிரி ஆலயத்திற்கு இடமாற்றம் செய்து கடிதம் வந்துள்ளது.
இதையடுத்து, சி.எஸ்.ஐ பேராலயத்திற்கு சென்னிமலை பகுதியில் பணியாற்றி வந்த அன்புராஜ் என்பவர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பதவியேற்க வந்த பேராயர் தடுத்து நிறுத்தல்:
இந்நிலையில், அன்புராஜ் கடந்த ஜூன் 7ஆம் தேதி சி.எஸ்.ஐ பேராலயத்தின் பேராயராக பொறுப்பேற்க வந்தபோது இங்குள்ள பேராயர் பிரபு சந்திரமோகன் அவரை உள்ளே விடாமல் தடுத்து வந்துள்ளார்.
மேலும், இன்று (ஜூன் 27) பேராலயத்திற்கு சென்றபோது பிரபு சந்திரமோகன் உட்புறமாக கதவை பூட்டிக்கொண்டு அன்புராஜை உள்ளே விடாமல் தடுத்துள்ளார்.
ஆலயத்திற்கு வெளியில் காத்துக்கிடந்த பேராயர்:
இதையடுத்து அன்புராஜ் சிஎஸ்ஐ ஆலயத்தின் வாசலிலேயே காலையிலிருந்து மூன்று மணிநேரமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தர்மபுரி நகர காவல் துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராயர் இந்த ஆலயத்தில் ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட பேராயருக்கு ஒரு பிரிவினர் ஆதரவாகவும், புதிய பேராயருக்கு மற்றொரு பிரிவினர் ஆதரவாகவும் உள்ளதால் இரண்டு பிரிவுகளுக்கும் கோஷ்டிப் பூசல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: viral video: நிலத்தகராறு; சகோதரர்கள் சரமாரி மல்லுக்கட்டு