தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே புதிதாக பிரியாணி கடை இன்று (ஜூன் 23) திறக்கப்பட்டது. இந்தக் கடையில் முதல் நாள் தள்ளுபடி விலையாக ரூ. 70க்கு ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என துண்டறிக்கை வழங்கப்பட்டது.
பிரியாணிக்காக தள்ளு முள்ளு
இதனை அறிந்த மக்கள் காலை பிரியாணி கடை திறந்ததும் பிரியாணி வாங்குவதற்காக குவிந்தனர். கடைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல், பிரியாணி கிடைக்காது என்ற அச்சத்தில் பிரியாணி வாங்குவதில் முட்டி மோதிக்கொண்டனர்.
இதுகுறித்து வருவாய் துறையினர் கடை உரிமையாளரிடம், கரோனா பரவும் காலம் என்பதால் தகுந்த இடைவெளியை கடைபிடித்து விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினர். ஆனாலும் பிரியாணி வாங்குவதற்காக குவிந்த பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல், முட்டி மோதிக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி வருவாய்த்துறையினர் பிரியாணி கடையில் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தினர். தொடர்ந்து கடை உரிமையாளர் வாடிக்கையாளர்களிடம் பலமுறை அறிவுறுத்தியும் யாரும் கேட்காததால், பிரியாணி விற்பனையை நிறுத்தி கடையை மூடினர்.
இதையும் படிங்க: 'ஏ.டி.எம்., பணம் செலுத்தும் எந்திரம் மூலம் ரூ. 48 லட்சம் மோசடி - சென்னை காவல் ஆணையர்!