தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் - முத்தரசன் - முதலமைச்சர் நடத்தும் கூட்டத்தில் கரோனா பரவாதா?

தருமபுரி: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதனோடு கூட்டணி சேர்கின்ற கட்சிகளையும் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

பாஜக கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்
பாஜக கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்

By

Published : Dec 30, 2020, 10:30 PM IST

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாவது, ”நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிச.29) அரசியல் கட்சி தொடங்குவது இல்லை என அறிவித்திருக்கிறார். தன்னுடைய உடல் நலம் குறித்து விவரித்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். தன்னுடைய கட்சி அறிவிப்புக்காக காத்திருந்த அனைவரும் மன்னிக்க வேண்டும் என தெரிவித்தார்.

சூழ்ச்சிகளை செய்யும் பாஜக

இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை. அவருடைய உடல் நலம் சார்ந்து அவர் எடுத்த இந்த முடிவு நல்லது. அவர் திரைத்துறையில் தொடர்ந்து பல சாதனைகள் புரிய வேண்டும். பாஜக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சூழ்ச்சி வேலைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டிலும் தனது சூழ்ச்சி பணிகளை தொடங்கி இருக்கிறது.

முதலமைச்சர் கூட்டத்தில் கரோனா பரவாதா?

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக மற்றும் அதனோடு கூட்டணி சேர்கின்ற கட்சிகளையும் தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக நிராகரிப்பார்கள். முதலமைச்சர், மாநிலம் முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்களையும், பரப்புரை கூட்டங்களையும் நடத்தி வருகிறார். இதில் பரவாத கரோனா, விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் மட்டும் எப்படி பரவும் என நான் கேள்வி எழுப்புகிறேன்.

கொள்கையை அறிவிக்காத கமல் ஹாசன்

பாஜக கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்

நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கினார். அவருடைய கட்சிக்கான கொள்கை என்னவென்று இதுவரை அறிவிக்கவில்லை. உலக அளவிலே இரண்டே இரண்டு கொள்கைகள்தான் உள்ளன. ஒன்று வலதுசாரி கொள்கை மற்றும் இடதுசாரி கொள்கை. ஆனால் கமல் ஹாசன் புதிதாக மய்யம் என்கிறார். இந்த மய்யம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எல்லோருக்கும் தெரியும். குடும்ப அட்டைக்கு 2,500 ரூபாய் வழங்குவதில் உள்நோக்கம். கரோனா காலத்தில் 5,000 ரூபாய் வழங்க சொல்லி கேட்டோம். அதைத்தான் இப்போது வலியுறுத்துகிறோம்" என்றார்.

இதையும் படிங்க:உருமாறிய கரோனா வைரஸ் வேகமாக பரவும் - பேராசிரியர் சீனிவாசன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details