தருமபுரி மாவட்டம் ஏரியூர் ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சந்தனக் கொடிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(47).
அவர் தனது மனைவி, மூன்று மகன்களுடன் விவசாய நிலத்தில் குடிசையில் வசித்துவருகிறார். கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று (ஜூலை26) அவர் குடிசையை இடி, மின்னல் தாக்கியது.