தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் மாடு உயிரிழப்பு! - Dharmapuri District News

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் மாடு பரிதாபமாக உயிரிழந்தது.

மாடு உயிரிழப்பு
மாடு உயிரிழப்பு

By

Published : Jul 21, 2020, 9:36 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இன்று (21.07.20) ராஜி வீட்டு அருகே சென்ற மின்கம்பதிலிருந்து மின்சார வயர் அறுந்து மாடு மீது விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலே மின்சாரம் தாக்கப்பட்ட மாடு பரிதாபமாக உயிரிழந்தது.

முன்னதாக, நேற்று(20.07.20) பாலக்கோடு அடுத்த மாரண்ட அள்ளி கந்தன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகள் சுதர்சனா வீட்டு அருகே மின் கம்பத்தில் இருந்து ஒயர் அறுந்து விழுந்திருந்ததை கவனிக்காமல் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பாலக்கோடு பகுதியில் இரண்டு நாட்களில் ஒரு சிறுமி மற்றும் ஒரு மாடு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னைக்கு வெளிநாட்டு பறவைகள் கடத்தல்? - காவல்துறை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details