தமிழ்நாட்டில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடந்த மாதம் 24ஆம் தேதிமுதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக கடைகளைத் திறக்க முடியாமல் முடித்திருத்துநர்கள் வருமானமின்றி தவித்துவருகின்றனர்.
அதேபோல், ஆண்கள் முகத்தைச் சவரம் செய்யமுடியாமல் தாடி மீசையுடன் முகப்பொலிவிழந்து காணப்படுகின்றனர். இந்நிலையில், சிலர் சவரத் தொழிலாளர்களை அழைத்து தங்களது வீடுகளிலேயே முடித்திருத்தம் செய்துகொள்கின்றனர்.
வீட்டிற்கு வந்து முடித்திருத்தும் முடித்திருத்துநர்கள் அந்த வகையில், தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் செல்போனில் அழைத்தால்போதும் வீட்டிற்கே வந்து முகச்சவரம், முடித்திருத்தும் பணியினை முடித்திருத்தும் தொழிலாளிகள் மேற்கொண்டுவருகின்றனர். தங்கள் கடைக்கு வரும் நிரந்தர வாடிக்கையாளர்கள் தங்களை செல்போனில் அழைப்பதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஊரடங்கு: நிவாரணம் கோரும் சவரத் தொழிலாளர்கள்