தர்மபுரி: கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாததால் திருக்கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள், இதர பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோயில் பணியாளர்களுக்கு நிதி உதவி:
திருக்கோயில் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதியுதவி வழங்கிட வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாடு அரசு திருக்கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள் பூசாரிகள், இதர பணியாளர்களுக்கு ரூ. 4,000 உதவித்தொகை, 15 வகை மளிகைப் பொருள்கள் வழங்க உத்தரவிட்டது.
அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 313 பயனாளிகளுக்கு உதவித்தொகையாக தலா ரூ.4,000 மற்றும் அரிசி 10 கிலோ, எண்ணெய் 500 கிராம், சர்க்கரை 500 கிராம், ஆட்டா 500 கிராம், டீ தூள் 200 கிராம், துவரம் பருப்பு 500கிராம், உளுத்தம் பருப்பு 500கிராம், கடலை பருப்பு 500கிராம், மிளகாய்த் தூள் 100கிராம், புளி 200கிராம், கடுகு 100கிராம், வெந்தயம் 100கிராம், மிளகு 100கிராம், சீரகம் 100கிராம், மஞ்சள்தூள் 100கிராம், அப்பளம் 1 உள்ளிட்ட 15 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வழங்கினார்.
இதையும் படிங்க:60 ஆயிரமாக குறைந்த தினசரி கரோனா பாதிப்பு