தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் முழுவதும் இன்று (ஜூலை18) ஒரே நாளில் நான்கு ஆயிரத்து 807 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 54 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 378ஆக உயர்ந்துள்ளது.
இதில், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பிய 18 நபர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்த எட்டு நபர்கள் என 26 நபர்களுக்கு வைரஸ் தொற்று பரவி உள்ளது.
பெங்களூரு பகுதியில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நபர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தராமல் தங்கள் வீடுகளிலேயே தங்கி இருந்ததால் அவர்கள் வீட்டிலிருந்து நபர்களுக்கும் வைரஸ் தொற்று பரவி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் ஆடி பிரதோஷ சிறப்பு வழிபாடு!