தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதன்படி, நேற்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் மூன்று ஆயிரத்து 756 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முன்று பெண் காவலா்கள் உள்பட நான்கு காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே வைரஸ் தொற்று பாதிப்பு இருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரவல்: சென்னையில் இரட்டிப்புக் காலம் 25.4 நாள்கள்