தர்மபுரியில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தர்மபுரி நகராட்சி 24ஆவது வார்டு அண்ணாமலை கவுண்டர் தெருவில் 108 வீடுகளில் 450க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அதில் நான்கு வீடுகளில் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அண்ணாமலை கவுண்டர் தெருவில் மூடப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் நகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.
தடை செய்யப்பட்ட பகுதியில் தர்மபுரி சார் ஆட்சியர் பிரதாப், நகராட்சி ஆணையர் தாணு மூர்த்தி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வீட்டிலிருந்து வெளியே வராமல் மாவட்ட நிர்வாகத்தின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அப்பகுதி மக்களை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.