தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நகைக் கடைகள், துணிக்கடைகள், செல்போன் கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை10) பேருந்து நிலையத்தில் துணிக்கடை நடத்திவந்த உரிமையாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படுள்ளன. மேலும் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள், துணிக்கடைப் பணியாளர்களை தனிமைப்படுத்தி அவர்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கடைக்கு வந்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:நிதி நிறுவன ஊழியர் குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று