தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் 9ஆக இருந்தது. அதைத்தொடர்ந்து இன்று புதிதாக இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரட்டை இலக்கமாக 11ஆக உயர்ந்துள்ளது.
தருமபுரியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்வு - தருமபுரியில் கரோனா அதிகரிப்பு
தருமபுரி: மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் மும்பையிலிருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. தற்போது அவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து தருமபுரியிலிருந்து சென்னை சென்ற ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தருமபுரியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஆறு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதைத்தொடர்ந்து இன்று பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இருவர் குணமடைந்து வீடு திரும்பினர்.