தர்மபுரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை க்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று தர்மபுரி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட தனியார் நிறுவனங்கள், வணிகர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கரோனா தொற்றும் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தர்மபுரியில் வணிகர்களுக்கு கரோனா விழிப்புணர்வு கூட்டம் - தர்மபுரியில் கரோனா விழிப்புணர்வு கூட்டம்
தர்மபுரி: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வணிகர் சங்கம் இடையே கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தர்மபுரி சார் ஆட்சியர் பிரதாப் கலந்துகொண்டு கடைகளில் பொதுமக்கள் வரும்பொழுது கைகளுக்கு கிருமிநாசினி தெளித்தல், முகக் கவசம் அணிந்து வருதலை உறுதி செய்த்ல, முகக் கவசம் அணியாதவர்களுக்கு முகக் கவசம் வழங்குதல், 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதித்தல் குறித்து வணிகர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சாரஸ்குமார் கலந்துகொண்டு கரோனா தடுப்பூசி குறித்தும், அதனை வணிகர்கள் கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.