தருமபுரி மாவட்டம் இண்டூர் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண், தருமபுரி வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 28 வயது ஆண், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 29 வயது, 30 வயது ஆண்கள் இருவர், பாப்பிரெட்டிப்பட்டி மெனசி பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தருமபுரியில் புதிதாக ஐந்து பேருக்கு கரோனா! - Corona Affected Five Persons In Dharmapuri
தருமபுரி: சென்னையில் இருந்து தருமபுரி வந்த 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
![தருமபுரியில் புதிதாக ஐந்து பேருக்கு கரோனா! Corona Affected Five Persons In Dharmapuri](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:17:14:1592747234-tn-dpi-01-corona-updat-img-7204444-21062020191427-2106f-02188-493.jpg)
Corona Affected Five Persons In Dharmapuri
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 35 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: கடலூரில் 47 பேருக்கு தொற்று உறுதி!