தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழை : 55 அடியை எட்டிய வாணியாறு அணை! - vaniyaru dam in darmapuri

தருமபுரி, சேர்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் வாணியாறு அணை 55 அடியை எட்டியுள்ளது.

vaniyaru-dam
vaniyaru-dam

By

Published : Oct 10, 2020, 8:11 PM IST

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, சேர்வராயன் மலைத் தொடர் அடிவாரத்தில் உள்ளது வாணியாறு அணை. 65 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரினால் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், ஆலபுரம், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணை சரியாக மழை பொய்யாத காரணத்தால் பல மாதங்களாக வறண்டு கிடந்து வந்தது. இந்த நிலையில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

வாணியாறு அணை

அந்த வகையில் தருமபுரி, சேர்வராயன் மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழையால் வாணியாறு அணை 55 அடியை எட்டி உள்ளது. இதனால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க மனு; திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details