தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணி: தொடங்கி வைத்த அமைச்சர்.கே.பி.அன்பழகன்! - Construction of flats in Dharmapuri

தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி, சின்னாங்குப்பம் ஆகிய இடங்களில் ரூ.172.94 கோடி மதிப்பில் 4 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணியினை அமைச்சர்.கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

minister kp anbalagan
minister kp anbalagan

By

Published : Dec 18, 2020, 7:10 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி, சின்னாங்குப்பம் ஆகிய இடங்களில் ரூ.172.94 கோடி மதிப்பில் 4 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணியினை அமைச்சர்.கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

கொண்டகரஅள்ளி திட்டப்பகுதியில் 280 குடியிருப்புகள், அரூர் பேரூராட்சி அம்பேத்கர் நகர் மற்றும் பீச்சான்கொட்டாய் பகுதியில் 1416 குடியிருப்புகள், நம்பிபட்டியில் 420 குடியிருப்புகள் என மொத்தம் 2116 வீடுகளை கொண்ட 4 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுமான பணி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர்.கே.பி.அன்பழகன் கலந்துக்கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

அமைச்சர் பேச்சு

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தருமபுரி மாவட்டத்தில் வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்துள்ள தகுதியுடைய அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறன.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பசுமை வீடுகள் திட்டம், பாரத பிரதமர் வீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வாயிலாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் வாயிலாக ரூ.381.31 கோடி மதிப்பீட்டில் 6,252 குடும்பங்கள் பயனடைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோழிமூக்கனூர் கிராமத்தில் ரூ.14.82 கோடி மதிப்பீட்டில் 168 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு தற்போது பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் தருவாயில் உள்ளது. மோளையனூர் ஊராட்சி பூனையனூர் கிராமத்தில் ரூ.15.66 கோடி மதிப்பீட்டில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒப்பந்ததாரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒப்புதலுக்கு அனுப்பு வைப்பு

நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை கிராமத்தில் ரூ.60.92 கோடி மதிப்பீட்டில் 608 அடுக்குமாடி குடியிருப்புகள், பென்னாகரம் பேரூராட்சி போடூர் பகுதியில் ரூ.26.65 கோடி மதிப்பீட்டில் 272 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், முக்குளம் கிராமத்தில் ரூ.16.07 கோடி மதிப்பீட்டில் 156 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காரிமங்கலம் வட்டம், முக்குளம் கிராமத்தில் சின்னமுரசுபட்டி பகுதியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 204 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பபடவுள்ளது.

18 மாதங்களில் நிறைவு

தருமபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டம்- பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.53.25 கோடி மதிப்பீட்டில் 2536 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 914 குடியிருப்புகள் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. அதேபோன்று தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள கட்டிடப்பணிகள் 18 மாத காலத்தில் நிறைவு பெற்ற பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் கார்த்திகா. பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத் குமார்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:எட்டு வழிச்சாலை குறித்து பேசிய முதலமைச்சர் மன்னிப்பு கேட்கக் கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details