தருமபுரி வட்டாட்சியா் அலுவலகம் அருகில் ஆவின் பாலக கட்டுமானப் பணிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கலந்துக்கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து நல்லம்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் 1145 பயனாளிகளுக்கு, சுமார் 2 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
அப்போது கே.பி.அன்பழகன் பேசுகையில், ''அனைத்து அரசு துறைகளிலும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஐம்பது, அறுபது ஆண்டு காலமாக நிறைவேற்றப்படாத பணிகளுக்குக்கூட தற்போது அரசு நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. தகுதி உடைய அனைவருக்கும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வீட்டு மனை பட்டா கொடுத்தாலும் வீடுகட்ட சாத்தியம் இல்லாதவர்களுக்கு, வீட்டுமனை பட்டாவுடன் வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தகுதியுடைய பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும். புதிய குடும்ப அட்டை பெறுவதில் உள்ள சிக்கல்களை நீக்கி, அதை ஆன்லைன் மூலம் பெறுவதற்கான எளிய வழிகளை அரசு உருவாக்கியுள்ளது. இவ்வாறு ஆன்லைன் மூலம் குடும்ப அட்டைக்கு பதிவு செய்யும் மனுக்கள் மீது உடனடியாக உரிய அலுவலர்கள் நடவடிக்க மேற்கொண்டு புதிய குடும்ப அட்டைகள் இதுபோன்ற அரசு விழாக்களில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆவின் பாலக கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்த கே.பி. அன்பழகன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளியைவிட்டு இடையில் நிற்பதை தடுப்பதற்காக பள்ளி கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஒரே ஒருமுறை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அப்போதைய முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் செயல்படுத்தினார். ஆனால் அதற்குப் பின் அத்திட்டத்தை அவர்களால் தொடர முடியவில்லை.
ஆனால் தமிழ்நாடு அரசு மாணவர்கள் மீது அக்கறை கொண்டு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது" என்றார்.
இதையும் படிங்க:தேர்வின் போது சத்தம் வந்தால் மாணவர்கள் வெளியேற்றப்படுவர்! அண்ணா பல்கலைக்கழகம்