தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பையர் நாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று ஒரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் பட்டாசு வெடிக்கும்போது தெறித்து மற்றொரு பிரிவைச் சேர்ந்த இருவர் மீது விழுந்துள்ளது. இதனால் இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு பிரச்னையாக மாறியது.
இதனால் ஒரு பிரிவைச் சார்ந்தவர்கள் மற்றொரு பிரிவைச் சார்ந்த மக்கள் வசிக்கும் வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தருமபுரியில் இருவேறு சமூகத்தினரிடையே மோதல் - Conflict between two communities in Dharmapuri
தருமபுரி: அரூர் அருகே பட்டாசு வெடிப்பது தொடர்பாக இருவேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
![தருமபுரியில் இருவேறு சமூகத்தினரிடையே மோதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4889962-thumbnail-3x2-dpi.jpg)
Conflict between two communities in Dharmapuri
இதில் காயமடைந்த காளியப்பன் என்பவர் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருவேறு பிரிவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
Conflict between two communities in Dharmapuri
இதனையடுத்து அப்பகுதியில் டிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரூா் சார் ஆட்சியர் பிரதாப் நேரில் சென்று விசாரணை செய்தார்.
இதையும் படிங்க: நான்காவது நாளாக தொடரும் மீட்புப்பணி!