தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோதனைச்சாவடிகள் வழியாக தருமபுரி வருபவா்களுக்கு தனியார் பள்ளிகளில் கரோனா பரிசோதனை - Dharmapuri news

தருமபுரி : அரூா் சோதனைச் சாவடி வழியாக தருமபுரி வருபவா்களுக்குத் தனியார் பள்ளிகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி  அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
தருமபுரி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

By

Published : May 6, 2020, 9:28 PM IST

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த அனுமன் தீர்த்தம், நரிப்பள்ளி சோதனைச் சாவடிகள் வழியாக சென்னை உட்பட, பல வெளி மாவட்டங்களில் இருந்தும் பொது மக்கள் தருமபுரி மாவட்டத்திற்கு வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து வருபவா்களைக் கண்காணிக்க அரூா் வட்டாட்சியர் செல்வகுமார், காவல்துறை சார்பாக காவல் ஆய்வாளர் முனைவர் கண்ணன், மருத்துவத் துறை சார்பாக வட்டார மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் அனுமன் தீர்த்தம் சோதனைச் சாவடி வழியாக தருமபுரி வருபவர்களை, அருகிலுள்ள குமாரம்பட்டி முல்லை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச் சென்று தற்காலிக உடல்நிலை பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நரிப்பள்ளி சோதனைச் சாவடி வழியாக வருபவர்களை நரிப்பள்ளி R.V. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பரிசோதனை முடித்து தொற்று இல்லாதவர்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பப்படுகின்றனா். தொற்றுக் கண்டறியப்பட்டவா்கள் கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அல்லது தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனர்.

இதையும் படிங்க :தருமபுரியில் மேலும் ஒரு நபருக்கு கரோனா; கோயம்பேட்டால் நேர்ந்த விபரீதம்

ABOUT THE AUTHOR

...view details