ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவா் சுந்தரேசன் (48) அரிசி வியாபாரி. அவரது மனைவி தெய்வம் (43), அவரது மகன் சுகாஷ் (21) சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு மெக்கட்ரானிக்ஸ் படித்துவந்தார்.
தருமபுரி அருகே கார் விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு - தர்மபுரி
தருமபுரி: பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் மோதிய கார் விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Dharmapuri accident
பெருந்துறையிலிருந்து குடும்பத்துடன் ஆந்திராவில் உள்ள காளஹஸ்திக்குத் தருமபுரி வழியாகச் செல்லும்போது முன்டாசு புறவடை கிராமம் அருகே அவா்கள் சென்ற கார் சென்டா் மீடியன் சுவரில் மோதி பின் மரத்தில் மோதிய விபத்தில் சுகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பெற்றோர் லேசான காயமடைந்தனர்.
உயிரிழந்த சுகாஷ் உடல் உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து அதியமான்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.