தருமபுரி குமாரசாமிபேட்டை ரயில்வே தண்டவாளப் பகுதியில் கல்லூரி சீருடை அணிந்த நிலையில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக தருமபுரி ரயில்வே காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக கிடந்த இளைஞரின் பெயர் லோகேஷ் என்றும் இவர் பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரியவந்தது.
மேலும் லோகேஷ் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்குச் செல்லாமல் தனது பாட்டி வீட்டில் இருந்து வந்தாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை மாணவன் சடலமாக ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்னையா என பல்வேறு கோணங்களில் தருமபுரி ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.