தருமபுரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்லுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அரசு தரப்பிலும் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. 13,595 பணியாளர்களுக்கு நடைபெற்ற இந்த பயிற்சியில் 694 பேர் கலந்துகொள்ளவில்லை.